செந்தில் பாலாஜிக்கு இதயத்தில் 90% அடைப்பு - மருத்துவமனை முக்கிய தகவல்
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இதயத்தில் 90% அடைப்பு உள்ளதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.
செந்தில் பாலாஜி
தமிழ்நாடு மின்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியிடம், அமலாக்கத்துறையினர் விசாரணை மேற்கொண்டு கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கையை தொடர்ந்து நாடு முழுவதும் இருந்து கண்டனங்கள் வலுப்பெற்று வருகிறது.
மேலும், அமைச்சரின் அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. தற்போது, செந்தில் பாலாஜி நெஞ்சு வலி காரணமாக ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
90% அடைப்பு
இந்நிலையில், செந்தில் பாலாஜிக்கு இதயத்தின் வலது புறத்தில் 90 சதவீதமும், இடது புறத்தில் 80 சதவீதமும் அடைப்பு உள்ளது என்று தெரியவந்துள்ளது. ரத்தக் கட்டுகளைத் தவிர்க்கும் ஹெப்பரேன் ஊசி வழங்கப்பட்டுள்ளது.
அவருக்கு அடைப்பு தீவிரமாக இருக்கும் நிலையில், ஸ்ண்டன்ட் பொறுத்துவதற்கான வாய்ப்பு இல்லை.
நீதிமன்ற அனுமதி கிடைக்காவிட்டால் அரசு மருத்துவமனையிலேயே தான் அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.