என் மீது தொடரப்பட்ட வழக்கு அரசியல் காழ்ப்புணர்ச்சியால் போடப்பட்ட பொய் வழக்கு - செந்தில் பாலாஜி!

M K Stalin V. Senthil Balaji Tamil nadu
By Vidhya Senthil Sep 27, 2024 03:55 AM GMT
Report

என் மீது தொடரப்பட்ட வழக்கு அரசியல் காழ்ப்புணர்ச்சியால் போடப்பட்ட பொய் வழக்கு என்று செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

 செந்தில் பாலாஜி 

கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கி தருவதாகச் சட்டவிரோத பணப்பரிமாற்றம் செய்த குற்றச்சாட்டில் அமலாக்கத்துறையினர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14ம் தேதி செந்தில் பாலாஜியைக் கைது செய்தனர்.

senthilbalaji

இதையடுத்து அவரது நீதிமன்ற காவல் 58 முறை நீட்டிக்கப்பட்ட நிலையில் நேற்று சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

மீண்டும் அமைச்சராவாரா செந்தில் பாலாஜி? நிபந்தனைகள் என்ன?

மீண்டும் அமைச்சராவாரா செந்தில் பாலாஜி? நிபந்தனைகள் என்ன?

 

இதைத் தொடர்ந்து, 471 நாட்களுக்குப் பிறகு புழல் சிறையிலிருந்து அவர் நேற்று இரவு விடுவிக்கப்பட்டார். அப்போது சிறையிலிருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜிக்கு மாலை அணிவித்தும் பட்டாசு வெடித்தும் ,இனிப்புகள் வழங்கியும் திமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

 பொய் வழக்கு 

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய செந்தில் பாலாஜி, “ என் மீது அன்பும், நம்பிக்கையும் வைத்திருந்த முதலமைச்சர் அவர்களுக்கு வாழ்நாள் நன்றி.

கழக இளைஞரணிச் செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும் நன்றி. என் மீது தொடரப்பட்ட வழக்கு அரசியல் காழ்ப்புணர்ச்சியால் போடப்பட்ட பொய் வழக்கு.

senthil bail

இந்த வழக்கை நீதிமன்றத்தில் சட்டரீதியாகச் சந்தித்து நிரபராதி என்று நிரூபிப்பேன்” என்று கூறினார். அதனைத் தொடர்ந்து சென்னை மெரினாவில் உள்ள முத்தமிழறிஞர் கலைஞர், பேரறிஞர் அண்ணா ஆகியோர் நினைவிடங்களில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

முன்னதாக வாரத்தில் 2 நாட்கள் அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஆஜராகிக் கையெழுத்திட வேண்டும், பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும் என்பது உட்பட 6 நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.