செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 9-வது முறையாக நீடிப்பு!
9-வது முறையாக செந்தில் பாலாஜினியின் ஈதிமன்ற காவல் நீடிக்கப்பட்டுள்ளது.
செந்தில் பாலாஜி கைது
சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடைச் சட்டத்தின்கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜியை கடந்தஜூன் 14-ம் தேதி அமலாக்கத் துறையினர் கைது செய்தனர்.
செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் 8-வது முறையாக நீட்டிக்கப்பட்டு, ஆகஸ்ட் 20 வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.
காவல் நீடிப்பு
இந்நிலையில், அவரது நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைந்தது, தற்பொழுது காணொலி மூலம் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி அல்லி முன்பு செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார்.
அவர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை நவம்பர் 6ம் தேதி வரை நீடித்து உத்தரவிட்டுள்ளார். மேலும், இவரது நீதிமன்ற காவல் இத்துடன் 9வது முறையாக நீடிக்கப்பட்டுள்ளது.