தொடர்ந்து மறுப்பு...மீண்டும் நீடிக்கப்பட்ட செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல்!!
இலாகா இல்லாத அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜி
2015-ஆம் ஆண்டில் சட்டவிரோத பண பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக கடந்த ஜூன் மாதம் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து இந்த வழக்கில் இருந்து அவர் ஜாமீன் பெற முயற்சி செய்து வரும் நிலையில், அவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டே வருகின்றது.
கைது செய்யப்பட்ட பிறகு இதய அறுவை சிகிச்சை செய்து கொண்டதால் அவரது உடல்நிலையை சுட்டிக்காட்டி அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. ஆனாலும், அவருக்கு அப்போது நீதிமன்றத்தில் ஜாமீன் மறுக்கப்பட்டது.
நீட்டிக்கப்ட்ட நீதிமன்ற காவல்
இதற்கிடையில் தொடர்ந்து அவரின் நீதிமன்ற காவலை சென்னை முதன்மை நீதிமன்றம் நீட்டித்து கொண்டே வருகின்றது. அதன் நீட்சியாக அவருக்கு நீதிமன்ற காவலை மீண்டும் வரும் நவம்பர் 22ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
முன்னதாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கிடைக்காத நிலையில், அதனை எதிர்த்து செந்தில் பாலாஜி தரப்பு உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் வழக்கை இன்று விசாரணைக்கு ஒத்திவைத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.