மசோதாக்களை ஆய்வு செய்ய...ஆளுநருக்கு அதிகாரம் உண்டு..!உச்சநீதிமன்றம் அதிரடி!!
ஆளுநருக்கு எதிராக பல மாநில அரசுகள் உயர்நீதிமன்றத்தை நாடியுள்ள நிலையில், அதில் தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களும் இணைந்துள்ளன.
ஆளுநர் அரசியல்
ஆளுநர் என்பவர் அரசியலுக்கு அப்பாற்பட்டவர் என்றே அரசியல் கட்சி தலைவர்கள் மட்டுமின்றி அரசியல் பத்திரிகையாளர்கள் மற்றும் அரசியல் வல்லுநர்கள் கூறுவர். ஆனால் தற்போதைய மத்திய பாஜக ஆட்சியில், மாநிலத்தில் எதிர்கட்சிகள் ஆட்சி செய்தால் அங்கு ஆளுநர் மூலம் அரசியல் செய்வதாக மத்திய அரசு மீதும் அந்தந்த மாநில அரசுகள் குற்றம்சாட்டி வருகின்றன.
தமிழகத்தை பொறுத்தமட்டில் சட்டமன்றத்தில் ஆளுநர் - முதல்வர் பிரச்சனை பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பல மசோதாக்களை கையெழுத்திடாமல் ஆளுநர் காலம் தாழ்த்தி வருகிறார் என ஆளும் திமுக அரசு குற்றம் சாட்டுகிறது. இது குறித்து முன்னர் கருத்து தெரிவித்திருந்த ஆளுநர் ஆர்.என்.ரவி தான் ஒரு மசோதாவை தள்ளிவைத்தால் அது புறக்கணிக்கப்பட்டதாகவே அர்த்தம் என பேச தமிழக அரசும் தீவிரமான நடவடிக்கைகளில் இறங்கி இருக்கின்றது.
நீதிமன்றத்தை தமிழக அரசு நாடியுள்ள நிலையில், இதே போன்ற வழக்கை முன்வைத்து பஞ்சாப் அரசும் நீதிமன்றத்தை நாடியிருந்தது. 7 மசோதாக்களை அம்மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திற்கு எதிராக ஆம் ஆத்மீ கட்சி தொடுத்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
ஆளுநர்களுக்கு உரிமை உண்டு
அப்போது, மசோதாக்களை reserve செய்து வைக்க ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது என்றும் ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை என நீங்கள் எவ்வாறு கூற இயலும்? என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
மேலும் இந்த விவகாரத்தில் மாநில அரசு ஏன் நீதிமன்றம் வர வேண்டும்? என்றும் ஏற்கனவே வேறு ஒரு மாநிலத்திலும் இது போன்று கோரிக்கை எழுந்தது என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். அப்போது, தமிழ்நாடு மற்றும் கேரளாவிலும் ஆளுநர்கள் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் நிலுவையில் வைத்துள்ளனர் என்று குறிப்பிட்ட மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, கேரளாவில் 3 மசோதாக்கள் மற்றும் தமிழ்நாட்டில் 12 ற்கும் மேற்பட்ட மசோதாக்கள் நிலுவையில் உள்ளது என்றும் தமிழ்நாடு மனுக்கள் வரும் 10 -ஆம் தேதி விசாரணைக்காக பட்டியலாகி உள்ளது என வாதிட்டார்.
அதற்கு பதில் அளித்த நீதிபதிகள், அரசியல் சாசனத்திற்கு உட்பட்டு ஆளுநர் முடிவெடுக்கு வேண்டும் என்று கூறி, இந்த விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய ஆளுநர் தரப்புக்கு உத்தரவு பிறப்பித்தனர். மேலும், வரும் 10 ஆம் தேதிக்கு மனுவின் மீதான விசாரணையை ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.