செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வதில் உறுதி - ஆளுநருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்!

M K Stalin V. Senthil Balaji Governor of Tamil Nadu
By Sumathi Jun 30, 2023 11:52 AM GMT
Report

செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வார் என ஆளுநருக்கு முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளார்.

அரசு உறுதி

பண மோசடி செய்ததாக அளிக்கப்பட்ட புகாரில் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். தற்போது, நீதிமன்ற காவலில் காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வதில் உறுதி - ஆளுநருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்! | Senthil Balaji Continue As Minister Stalin Letter

தொடர்ந்து, செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து உடனடியாக நீக்குவதாக ஆளுநர் அலுவலகம் தரப்பில் செய்திக்குறிப்பு வெளியிடப்பட்டது.

ஸ்டாலின் கடிதம்

இதற்கிடையில், செந்தில் பாலாஜியின் பதவி நீக்க உத்தரவை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி. நிறுத்தி வைத்துள்ளார். இந்நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.

செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வதில் உறுதி - ஆளுநருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்! | Senthil Balaji Continue As Minister Stalin Letter

அதில், செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வார் என்பதில் அரசு உறுதியாக உள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.