ஆளுநரின் அதிகாரம் என்னவென்று அவருக்கே தெரியல - சாடிய கனிமொழி எம்.பி
ஆளுநரின் அதிகாரம் என்னவென்று ரவி அவர்களுக்குத் தெரியாமல் போனது வேடிக்கையளிப்பதாக எம்.பி.கனிமொழி தெரிவித்துள்ளார்.
கனிமொழி எம்.பி
பண மோசடி செய்ததாக அளிக்கப்பட்ட புகாரில் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். தற்போது, நீதிமன்ற காவலில் காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தொடர்ந்து, செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து உடனடியாக நீக்குவதாக ஆளுநர் அலுவலகம் தரப்பில் செய்திக்குறிப்பு வெளியிடப்பட்டது. இதற்கிடையில், செந்தில் பாலாஜியின் பதவி நீக்க உத்தரவை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி. நிறுத்தி வைத்துள்ளார்.
ஆளுநர் செயல்
இந்நிலையில், இந்த செயலை திமுக எம்.பி.கனிமொழி கண்டித்துள்ளார். ஒரு நியமன பதவியிலிருக்கும் ஆளுநரின் அதிகாரம் என்னவென்று ரவி அவர்களுக்குத் தெரியாமல் போனது வேடிக்கையளிக்கிறது. அரசியலமைப்புக்கும் ஒரு மாநிலத்தின் இறையாண்மைக்கும் எதிராகச் செயல்படுவதை நிறுத்திவிட்டு,
அவர் தனது ஒரே கடமையான ஆளுநர் பணியைச் செய்யலாம்.எண்ணித் துணிக கருமம் துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு-குறள் 467. கலைஞர் உரை : நன்றாகச் சிந்தித்த பிறகே செயலில் இறங்க வேண்டும்; இறங்கிய பிறகு சிந்திக்கலாம் என்பது தவறு என அவரது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.