ஓட்டுநர் ஷர்மிளாவுக்கு வீடு தேடி வந்த வேலை - கனிமொழி எம்.பி உறுதி!
பணிநீக்கம் செய்யப்பட்ட ஷர்மிளாவிற்கு வேலை வீடு தேடி வந்துள்ளது.
ஓட்டுநர் ஷர்மிளா
கோவை, வடவள்ளி பகுதியைச் சேர்ந்தவர் ஷர்மிளா. இவரது தந்தை மகேஷ் சமையல் எரிவாயு சிலிண்டர் ஆட்டோவை ஓட்டி வந்துள்ளார். இதனால் ஷர்மிளாவுக்கு சிறு வயது முதலே வாகனங்கள் ஓட்டுவதில் அதிக ஆர்வம் இருந்துள்ளது.
இதையடுத்து ஓட்டுநர் பயிற்சி முடித்ததும் தனியார் நிறுவனம் அளித்த வாய்ப்பை பயன்படுத்தி பேருந்து ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி ஷர்மிளாஓட்டும் பேருந்தில் பயணம் செய்தார்.
வீடு தேடி வந்த வேலை
அவருக்கு கைக் கடிகாரத்தை பரிசளித்தார். தொடர்ந்து, இவரது வருகைக்குப் பின் ஓட்டுநர் ஷர்மிளாவிற்கும் பெண் நடத்துநருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகத் தகவல் வெளியானது. தான் பிரபலமாக வேண்டும் என்ற எண்ணத்தில் ஷர்மிளா செயல்படுவதாக பேருந்து உரிமையாளர் அவரை பணிநீக்கம் செய்யப்பட்டதாக கூறப்பட்டது.
இந்நிலையில், இதனை அறிந்த கனிமொழி, ஷர்மிளா வேலை இழந்தது குறித்து விசாரித்து அவருக்கு வேறு நிறுவனத்தில் வேலை பெற்றுத் தருவது குறித்து உறுதியளித்தார். மேலும், உக்கடம்-போகம்பட்டி வரை செல்லும் தனியார் பேருந்து நிறுவனமான கிருஷ்ணா நிறுவனம் ஓட்டுநர் பணி அளித்துள்ளது.