கோவை பேருந்து ஓட்டுநர் ஷர்மிளா பணி நீக்கம் - பரபரப்பு!

Coimbatore
By Sumathi Jun 23, 2023 07:52 AM GMT
Report

கோவை தனியார் பேருந்து ஓட்டுனர் ஷர்மிளா பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

ஓட்டுநர் ஷர்மிளா

கோவை பீளமேடு வரை தனியார் பேருந்தில் கனிமொழி எம்பி பயணம் செய்தார். அப்போது அந்த பேருந்தின் பெண் ஓட்டுனர் ஷர்மிளாவுடன் பேசினார். எம்பி மற்றும் அவருடன் பயணித்தவர்கள் டிக்கெட் எடுத்ததாகவே கூறப்படுகிறது.

கோவை பேருந்து ஓட்டுநர் ஷர்மிளா பணி நீக்கம் - பரபரப்பு! | Kovai Private Female Driver Sharmila Dismissed

தொடர்ந்து இது குறித்த புகைப்படங்கள் வீடியோக்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வந்தன. இந்நிலையில், திடீரென ஓட்டுனர் ஷர்மிளா பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

விளம்பரத்திற்காக தலைவர்களை சந்திப்பதாகவும், பயணிகளை ஏற்றுவதாகவும் பேருந்து உரிமையாளர் வாக்குவாதம் செய்ததை அடுத்து பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பி.வி தனியார் பேருந்து நிறுவனத்தின் செயலால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்