முதல் பேருந்து டிரைவராக அசத்தும் இளம்பெண் - எதனால் ஆர்வம்?
இளம் பெண் ஒருவர் தனியார் பேருந்து டிரைவாக பணிபுரியும் சம்பவம் பாராட்டுகளை பெற்று வருகிறது.
பெண் டிரைவர்
கோவை வடவள்ளியை சேர்ந்தவர் ஷர்மிளா என்ற இளம் பெண். இவர் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று தனியார் பேருந்தை இயக்கி வருகிறார். மருந்தியல் துறையில் பட்டப்படிப்பு படித்துள்ள பெண் ஓட்டுநர், வடவள்ளி பகுதியில் தனது தந்தை மகேசின் ஆட்டோவை அவ்வப்போது இயக்கி வந்துள்ளார்.
தந்தையின் ஊக்கத்தால் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்ற அவருக்குத் தனியார் பேருந்து நிறுவனம் ஓட்டுநராக பணிபுரிய வாய்ப்பளித்துள்ளது. கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று இருந்த போதும், பேருந்தை இயக்க வழித்தடம் கிடைக்காமல் இருந்ததாகவும், தற்போது வாய்ப்பு கிடைத்து இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும் ஷர்மிளா தெரிவித்துள்ளார்.
பெருமிதம்
பெண் பேருந்து ஓட்டுவதற்கும், ஆண் பேருந்து ஓட்டுவதற்கும் எந்த வித்தியாசமும் இல்லை. அனைத்து துறைகளிலும் பெண்களின் பங்களிப்பு இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக பேருந்து பயணிகள் தெரிவிக்கின்றனர்.
தற்போது பெண்களும் சாதிக்க முடியும் என்பதற்கான தூண்டுகோலாக இருக்கும் இவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.