வலியோடு இருக்கிறேன்; வீடியோ காலில் செந்தில் பாலாஜி - காவல் நீட்டிப்பு!
வீடியோ காலில் ஆஜரான செந்தில் பாலாஜியிடம் நீதிபதி நலம் விசாரித்தார்.
செந்தில் பாலாஜி
சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சர் செந்தில் பாலாஜியைக் கைதுசெய்தனர். உடனே திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதாகத் துடித்த செந்தில் பாலாஜி, உடனடியாக ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அதன்பின், சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில், தனியார் மருத்துவமனையான காவேரி மருத்துவமனைக்கு செந்தில் மாற்றப்பட்டார். பின்னர், இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
காவல் நீட்டிப்பு
அதைத் தொடர்ந்து செந்தில் பாலாஜியின் உடல்நிலை சீராக இருப்பதாகக் கூறப்பட்டது. இந்நிலையில், காணொளி மூலம் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற விசாரணையில் செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது நீதிபதி அல்லி, `எப்படி இருக்கிறீர்கள்' என செந்தில் பாலாஜியிடம் நலம் விசாரித்தார். அதற்கு `வலியோடு இருக்கிறேன்' என செந்தில் பாலாஜி பதிலளித்தார். அதைத் தொடர்ந்து நீதிபதி அல்லி, செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை ஜூலை 12-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார்.