மீண்டும் புழல் சிறையில் செந்தில் பாலாஜி...!! மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்...!!
இலாகா இல்லாத அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார்.
அமைச்சர் செந்தில் பாலாஜி
அமலாக்கத்துறையால் கைதான அமைச்சர் செந்தில் பாலாஜி, உடல் நல குறைவினால் அவ்வப்போது சிகிச்சை பெற்று வருகின்றார். தொடர்ந்து, ஜாமீன் கோரியும் அவருக்கு நீதிமன்றத்தில் ஜாமீன் மறுக்கப்பட்டு வருகின்றது.
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நேற்று முன் தினத்துடன் நிறைவடைந்த நிலையில், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் புழல் சிறையில் இருந்து காணொலி காட்சி மூலமாக ஆஜர்படுத்தபட்டார். அப்போது மீண்டும் அவரின் நீதிமன்ற காவல் டிசம்பர் 15-ஆம் தேதி வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக, செந்தில் பாலாஜிக்கு வாந்தி, மயக்கம் காரணமாக அவர் நவம்பர் 12 ஆம் தேதி சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
அதன் பிறகு, அவர் மேல்சிகிச்சைக்காக ஓமந்தூரார் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல அறிவுறுத்தினர். அங்கு செந்தில் பாலாஜிக்கு இதயவியல் துறை, நரம்பியல் துறை உள்ளிட்டோர் சிகிச்சை அளித்தனர். இந்த நிலையில் செந்தில் பாலாஜி இன்று காலை 6.30 மணிக்கு சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு, மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.