ஜூனியர்களை அடித்து துன்புறுத்திய சீனியர்கள் - வைரலாகும் வீடியோ

Tamil nadu
By Thahir Apr 27, 2023 06:50 AM GMT
Report

கல்லூரி விடுதியில் ஜூனியர் மாணவர்களை ராகிங் என்ற பெயரில் அடித்து துன்புறுத்திய சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ஜூனியர்களை அடித்து துன்புறுத்திய சீனியர்கள்

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செய்யாரில் உள்ளது அறிஞர் அண்ணா அரசு கலை கல்லூரி. இந்த கல்லூரிக்கு 3 விடுதிகள் உள்ளன.

அதில் பைங்கினர் அண்ணா நகர் பகுதியில் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் செயல்பட்டு வரும் விடுதியில் சுமார் 70 மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர்.

இந்நிலையில் அந்த விடுதியில் உள்ள சீனியர் மாணவர்கள் ஜூனியர்ஸ்க்கு கொடுத்த வேலையை அவர்கள் செய்ய மறுதுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த சீனியர்ஸ் சாட்டை கயிற்றில் அடித்து தண்டனை கொடுத்தனர்.

வைரலான வீடியோ

இது குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியுள்ளது. விசாரணை மேலும், தகவல் அறிந்த கல்லூரி முதல்வர் கலைவாணி, இந்த சம்பவம் குறித்த 8 மாணவர்களை அழைத்து விசாரணை நடத்தினர்.

Seniors who beat and harassed juniors

இதனை பற்றி அறிந்த போலீசார் விடுதிக்கு வந்து வார்டன் வேட்டவலம் ரவி மற்றும் விடுதியில் தங்கியுள்ள ஒவ்வொரு மாணவர்களிடம் நேரடியாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவத்தால் செய்யாறில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இச்சம்பவம் பல ஆண்டுகளாக நடந்து வருவதாக கூறப்படுகிறது.