பயணியின் நெஞ்சில் பூட்ஸ் காலால் மிதித்த எஸ்.ஐ - கொடூர தாக்குதல்!

Crime Nagapattinam
By Sumathi Apr 25, 2023 06:38 AM GMT
Report

போராட்டத்தில் ஈடுபட்ட நபரை எஸ்.ஐ பூட்ஸ் காலால் உதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாக்குவாதம்

நாகப்பட்டினத்தை அடுத்துள்ள நாகூர் வாஞ்சூர் ரவுண்டானாவில் மது கடத்தலை தடுப்பதற்காக போலீஸார் நான்கு வழி சாலைகளில் இரண்டு சாலைகளில், சாலை தடுப்புகளை வைத்து ஒருவழி சாலையாக அமைத்தனர்.

பயணியின் நெஞ்சில் பூட்ஸ் காலால் மிதித்த எஸ்.ஐ - கொடூர தாக்குதல்! | Nagai Police Si Kicked Protesters Face

இதனால் கும்பகோணத்தில் இருந்து நாகப்பட்டினம் வந்த இரண்டு அரசு பேருந்துகள் நீண்ட நேரம் பயணிகளுடன் காத்திருக்க வேண்டியிருந்தது. இந்நிலையில் அங்கு இருந்த மக்கள் தடுப்புகளை அகற்றுமாறு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

கொடூர தாக்குதல்

மேலும், தகவல் அறிந்து போலீஸ் உதவி ஆய்வாளர் பழனிவேல் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்துள்ளார். அப்போது அவருக்கும் அங்கே போராட்டத்தில் ஈடுபட்ட நபருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

பயணியின் நெஞ்சில் பூட்ஸ் காலால் மிதித்த எஸ்.ஐ - கொடூர தாக்குதல்! | Nagai Police Si Kicked Protesters Face

அப்பொழுது அவர் கோபத்துடன் அந்த நபரைச் சட்டையை பிடித்து தரதரவென இழுத்துச் சென்று காவல் வாகனத்தில் ஏற்றியுள்ளார். மேலும், தனது பூட்ஸ் காலால் அந்த நபரின் முகத்திலும் உதைத்துத் தாக்கியுள்ளனர்.

இந்த சம்பவத்தை அங்கு இருந்த மக்கள் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர். அதனைத் தொடர்ந்த நடவடிக்கையில் உதவி ஆய்வாளரை ஆயுதப்படைக்கு மாற்றி நாகை மாவட்ட எஸ்பி உத்தரவிட்டுள்ளார்.