தேர் திருவிழாவில் சூடம் ஏற்றக்கூடாது - பூட்ஸ் காலால் மிதித்து தள்ளிய டிராபிக் போலீஸ்
ஸ்ரீரங்கம் சித்திரை தேர் திருவிழாவில் தேருக்கு முன் ஏற்றிய சூடத்தை டிராபிக் போலீஸ்காரர் ஒருவர் பூட்ஸ் காலால் மிதித்து அணைத்தார்.
சித்திரை தேர் திருவிழா
திருச்சி ஸ்ரீரங்கத்தில், சித்திரை தேர் திருவிழா நடந்தது. அங்கு பாதுகாப்பிற்காக இருந்த டிராபிக் போலீசார், பக்தர்கள் தேங்காய் உடைப்பதற்கும், சூடம் ஏற்றுவதற்கும் அனுமதி தரவில்லை.
அவை கூட்ட நெரிசலில் பக்தர்களின் கால்களில் படுகாயத்தை ஏற்படுத்தும் என்று அனுமதிக்கவிலலை என்று கூறினார்.
பூட்ஸ் காலில் அணைத்தார்
மேலும் அங்கிருந்த மக்கள், அதனை காதில் வாங்காமல் தேங்காய் உடைத்தும், சூடம் ஏற்றியும் வழிபட்டனர்.
அதனால் ஆத்திரமடைந்த ட்ராபிக் இன்ஸ்பெக்டர் அவற்றை தனது காலால் மிதித்து அணைத்து தள்ளினார். இந்த சம்பவம் பக்தர்கள் இடையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.