இம்ரான் கான் மீது வழக்கு தாக்கல் செய்த மூத்த வழக்கறிஞர் சுட்டுக் கொலை - பாகிஸ்தானில் பரபரப்பு
இம்ரான் கான் மீது தேசத்துரோக வழக்கை தாக்கல் செய்த மூத்த வழக்கறிஞர் அப்துல் ரஷாக் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
வழக்கறிஞர் சுட்டுக் கொலை
பாகிஸ்தான் பலுாசிஸ்தான் மாகாணத்தில் குவெட்டாவின் விமான நிலைய சாலையில், நீதிமன்றத்திற்குச் சென்று கொண்டிருந்த வழக்கறிஞர் அப்துல் ரஷாக் மீது ஆயுதம் ஏந்தி வந்த மர்ம நபர்கள் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர்.
குண்டு பாய்ந்து உயிருக்கு போராடிய வழக்கறிஞர் அப்துல் ரஷாக் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அப்போது அவர் பாதிவழியிலேயே உயிரிழந்தார்.

குவெட்டா சிவில் மருத்துவமனையின் அறுவை சிகிச்சை நிபுணர் ஆயிஷா ரியாஸ் கூறுகையில், அப்துல் ரஷாக் ஷார் கொடிய தாக்குதலுக்கு ஆளாகியுள்ளார்.
பாகிஸ்தானில் பரபரப்பு
அவர் மீது 16 குண்டுகள் பாய்ந்துள்ளதால், மருத்துவமனைக்கு கொண்டு வரும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
3 இருசக்கர் வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத 6 பேர் ஷார் மீது தாக்குதல் நடத்தினர். அவரது மார்பு,கழுத்து, வயிற்று பகுதிகளில் 16 குண்டுகள் அவர் மீது பாய்ந்துள்ளதாக மூத்த காவல்துறை அதிகாரி குல் முஹம்மது தெரிவித்தார்.
குவெட்டா பார் அசோசியேஷன் தலைவர் அபிட் கக்கர் பலுாசிஸ்தான் உயர்நீதிமன்றம் மற்றும் கீழ் நீதிமன்றங்களில் முழுமையான புறகணிப்பை அறிவித்தார்.
வழக்கறிஞர் அப்துல் ரஷாக் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பாகிஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.