Biplab Kumar Deb History in Tamil: பாகிஸ்தான் அகதிகளாக இருந்து இந்திய குடிமகனான பிப்லப் குமார் டெப்பின் அரசியல் வாழ்கை!
பாஜக கட்சியை சேர்ந்த பிப்லப் குமார் டெப்பின் வாழ்க்கை பயணம்.
பிறப்பு, கல்வி
பிப்லப் குமார் டெப் 1971-ம் ஆண்டு நவம்பர் 25 ஆம் தேதி அன்று திரிபுராவின் கோமதி மாவட்டம், உதய்பூரில் உள்ள ராஜ்தார் நகர் கிராமத்தில் பிறந்தார் .
அவர் பிறப்பதற்கு முன்பு 1971-ல் விடுதலைப் போரின் போது அவரது பெற்றோர் கிழக்கு பாகிஸ்தானில் உள்ள சந்த்பூர் மாவட்டத்தில் இருந்து அகதிகளாக இந்தியாவிற்கு குடிபெயர்ந்தனர்.
அவரது தந்தை 27 ஜூன் 1967 முதல் இந்தியக் குடிமகனாக உள்ளார். அவர் தனது குழந்தைப் பருவத்தையும் பள்ளிப் படிப்பையும் திரிபுராவில் கழித்தார், திரிபுரா பல்கலைக்கழகத்தில் தனது பட்டப்படிப்பை முடித்த பிறகு புது டில்லிக்கு மாறினார்.
பின்னர் அவர் 15 ஆண்டுகள் களைத்து திரிபுரா திரும்பினார். இவரது மனைவி நிதி டெப், இவர்களுக்கு 1 ஆண் மற்றும் 1 பெண் என இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.
அரசியல்
2014-ல் இவர் திரிபுரா மாநில பாஜக பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார், மேலும் திரிபுராவில் பாஜகவை பலப்படுத்தும் வேலைகளில் ஈடுபட்டார்.
2016-ல் இவர் பாஜகவின் திரிபுரா மாநிலத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார், இதில் அவர் பாஜகவின் நீண்டகால மாநிலத் தலைவராக இருந்த சுதீந்திர தாஸ்குப்தாவுக்குப் பதிலாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2017-ல், சுதிப் ராய் பர்மன் தலைமையிலான இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் இருந்த எம்.எல்.ஏ-க்கள் பாரதிய ஜனதா கட்சிக்கு மாறுவதற்கு இவர் உதவினார்.
2018-ல் மாநிலத் தேர்தலுக்கான பிரச்சாரத்தில் அவர் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். மேலும், அவர் தனது பிரச்சாரத்தை திரிபுரா பழங்குடியினர் பகுதிகள் தன்னாட்சி மாவட்ட கவுன்சிலில் இருந்து தொடங்கினார். அந்த பகுதி அப்போதைய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அடித்தளமாக இருந்து.
தொடர்ந்து, 2018-ல் சட்டமன்றத் தேர்தலில் உள்ளூர் பாஜகவை வழிநடத்தினார், 25 ஆண்டுகால இடது முன்னணி ஆட்சிக்குப் பிறகு பதவியைப் பெற முயன்றார்.
முதலமைச்சர்
இவர் 2018-ல் அகர்தலாவில் உள்ள பனமாலிபூர் தொகுதியில் இந்திய தேசிய காங்கிரஸ் எம்எல்ஏ கோபால் சந்திர ராய் நடத்திய தேர்தலில் போட்டியிட்டு 9,549 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
மேலும், இவர் திரிபுராவில் உள்ள 60 இடங்களில் அவரது கூட்டாளியான திரிபுராவின் பழங்குடி மக்கள் முன்னணியுடன் 44 இடங்களை வென்று முதல்வரானார்.
தொடர்ந்து, இளைஞர்களின் வேலை வாய்ப்புகள் என்ற தலைப்பில் பிரச்சாரம் செய்தார், திரிபுராவின் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டால் அதை மேம்படுத்துவதாக உறுதியளித்தார்.
தொடர்ந்து இவர், 7வது ஊதியக் குழுவை அமல்படுத்துவதாகவும் திரிபுராவின் ஊழியர்களுக்கு உறுதியளித்தார். திரிபுராவில் கட்சிக்காக பிரச்சாரம் செய்வதற்காக இந்தியா முழுவதிலும் இருந்து முக்கிய பாஜக அமைச்சர்களை அழைத்து வந்தார்.
பிறகு 2022-ல் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.
சர்ச்சைகள்
இவர் 2018-ல், மகாபாரத காலத்தில் இணையம் இருந்ததாகக் கூறி நாடு தழுவிய சர்ச்சையைக் கிளப்பினார்.
பின்னர் சிவில் சர்வீஸ் தேர்வு குறித்து அவர், சிவில் இன்ஜினியர்கள் மட்டுமே சிவில் சர்வீஸ் தேர்வு எழுத வேண்டும் என்று கூறியது சர்ச்சைக்கு உள்ளானது.
ஒரு விழாவில் உரையாற்றும் போது, 1919-ல் நடந்த படுகொலைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் நைட்ஹுட்டை நிராகரிப்பதற்குப் பதிலாக ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் ரபீந்திரநாத் தாகூர் தனது நோபல் பரிசைத் திருப்பிக் கொடுத்ததாக மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கினார்.
2019-ல், "முகலாயர்கள் திரிபுராவின் கலாச்சாரத்தின் மீது குண்டு வீச நினைத்தனர்" என்று கூறினார். சர்வதேச அழகிப் போட்டிகள் ஒரு கேலிக்கூத்து என்று கூறினார்.
மேலும், டயானா ஹெய்டனுக்கு உலக அழகி பட்டம் வழங்கியதை குறிபிட்டு, உலக அழகி பட்டம் பங்கேற்பாளர்களின் அழகை அடிப்படையாகக் கொண்டிருக்காமல் சந்தை உந்துதல் அடிப்படையில் வழங்கப்டுகிறது என்று அவர் கூறினார்.
2020-ல், பஞ்சாபிகளும் ஜாட் இனத்தவர்களும் உடல் ரீதியாக வலிமையானவர்கள் ஆனால் பெங்காலிகளை விட புத்திசாலித்தனம் குறைவாக இருப்பதாக அவர் கூறினார்.