Thursday, May 15, 2025

பிரபல நடிகர் மறைவு - திரையுலகினர் இரங்கல்!

Tamil Cinema Death
By Sumathi 2 years ago
Report

நடிகர் கைகலா சத்ய நாராயணா உடல்நலக் குறைவால் காலமானார்.

 கைகலா சத்ய நாராயணா

கமல்ஹாசனின் ‘பஞ்சதந்திரம்’ படத்தில் ஸ்ரீமனின் மாமனாராக நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் கைகலா சத்ய நாராயணா(87). பெரியார் படத்தில் பெரியாரின் தந்தை கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.

பிரபல நடிகர் மறைவு - திரையுலகினர் இரங்கல்! | Senior Actor Kaikala Satyanarayana Passed Away

தெலுங்கில் 750-க்கும் மேற்பட்ட படங்களில் வில்லன், குணச்சித்திர வேடங்களில் நடித்து இருக்கிறார். கடைசியாக 2019-ல் வெளியான மகேஷ்பாபுவின் மகிரிஷி படத்தில் நடித்துள்ளார்.

இரங்கல் 

ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு செயற்கை சுவாச கருவி உதவியுடன் தீவிர சிகிச்சையில் இருந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இவரது மறைவுக்கு திரையுலகினரும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.