ரம்யா கிருஷ்ணனின் மகனை பார்த்துள்ளீர்களா? - வைரலாகும் புகைப்படம்

ramyakrishnan ரம்யா கிருஷ்ணன்
By Petchi Avudaiappan 1 வருடம் முன்

நடிகை ரம்யா கிருஷ்ணன் தனது மகன் மற்றும் கணவருடன் இருக்கும் புகைப்படத்தைக் கண்டு ரசிகர்கள் ஆச்சரியமடைந்துள்ளனர். 

இளம் வயதிலேயே ஒய்.ஜி.மகேந்திரனுக்கு ஜோடியாக 'வெள்ளை மனசு' என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமான ரம்யா கிருஷ்ணன் சிவாஜி கணேசன் - ரஜினிகாந்த் நடித்த பிளாக்பஸ்டர் ஹிட் படமான 'படிக்காதவன்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். தொடர்ந்து தமிழில் 'ஜல்லிக்கட்டு', 'முதல் வசந்தம்', 'பேர் சொல்லும் பிள்ளை', 'வானமே எல்லை' என ஒரு சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும், தெலுங்கில் முன்னணி நடிகையாகி, பல படங்களில் நடித்தார்.

ரம்யா கிருஷ்ணனின் மகனை பார்த்துள்ளீர்களா? - வைரலாகும் புகைப்படம் | Ramya Krishnan With His Son And Husband

ரஜினியுடன் நடித்த 'படையப்பா' படம் தான் மீண்டும் ரம்யா கிருஷ்ணனுக்கு தமிழில் கம்பேக் கொடுத்தது. அதைத் தொடர்ந்து கமல்ஹாசனின் 'பஞ்சதந்திரம்' படத்தில் வில்லி வேடத்தில் நடித்தார். 'பாகுபலி' மற்றும் 'பாகுபலி 2' படங்களில் ராஜமாதா சிவகாமியாக வலம் வந்த அவர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கிய 'குயின்' வெப் சீரிஸில் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவாக நடித்திருந்தார். 

இதனிடையே பிரபல தெலுங்கு இயக்குநர் கிருஷ்ண வம்சியை 2003 அம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டார் ரம்யா கிருஷ்ணன் . இந்த தம்பதியினருக்கு 17 வயதான  ரித்விக் என்ற மகன் உள்ளார். அவர் படிப்பை முடித்துவிட்டு திரையுலகில் சேர ஆர்வமாக உள்ளதாக தெலுங்கு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வரும் நிலையில் கணவர் மற்றும் மகனுடன் எடுத்துக் கொண்ட அவரது படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.