செங்கோட்டையன் டெல்லி பயணம்; என்ன காரணம்? அவரே சொன்ன விளக்கம்!
செங்கோட்டையன் டெல்லி செல்லும் காரணம் குறித்து பதிலளித்துள்ளார்.
செங்கோட்டையன்
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், அதிமுக கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டார். மேலும், அவருக்கு ஆதரவாக செயல்பட்ட கட்சி நிர்வாகிகளின் பதவிகளும் பறிக்கப்பட்டது.
இந்நிலையில், செங்கோட்டையன் திடீர் டெல்லி பயணம் மேற்கொள்ளவுள்ளார். இதற்காக கோவை விமான நிலையம் வந்த அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.
டெல்லி பயணம்
அப்போது பேசிய அவர், ”நான் கோயிலுக்குச் செல்கிறேன். மன நிம்மதிக்காக ஹரித்வார் செல்கிறேன். கொஞ்சம் ரிலாக்ஸா இருக்க வேண்டி கோயிலுக்கு போகிறேன். ராமரை வணங்கிவிட்டு வர வேண்டியதுதான்.
அனைவரும் ஒன்றாக வேண்டும், கட்சி வளர வேண்டும் என்பதுதான் எனது நோக்கம். நல்லதுக்காக சொல்கிறோம். அதற்கு பொதுச்செயலாளர் பல்வேறு முடிவுகளை எடுக்கிறார். முடிவுகள் குறித்து கருத்துகள் சொல்ல இயலாது.
காலம்தான் பதில் சொல்லும். எனது பயணத்தில் பாஜக தலைவர்கள் யாரையும் சந்திக்கப்போவது இல்லை, நாளை முக்கிய அறிவிப்பு எதையும் வெளியிட போவதில்லை.” என தெரிவித்துள்ளார்.