தவெகவுடன் புதிய கூட்டணியில் செங்கோட்டையன் - எடப்பாடிக்கு ஷாக்!
தவெகவுடன், செங்கோட்டையுடன் புதிய கூட்டணி அமையலாம் என தகவல் உலா வருகிறது.
செங்கோட்டையன் நீக்கம்
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி நிகழ்வில், ஓபிஎஸும் டிடிவி தினகரன் உடன் ஒரே நிகழ்வில் செங்கோட்டையன் தோன்றியது அதிமுக அரசியலில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அதன் விளைவாக, எடப்பாடி பழனிசாமி செங்கோட்டையனை கட்சியிலிருந்து நீக்கினார். இந்நிலையில், செங்கோட்டையனின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
புதிய கூட்டணி
அதிமுகவை மீண்டும் ஒன்றுபடுத்தும் பணியை செங்கோட்டையன் முன்னை விட வேகமாக முன்னெடுப்பார்கள். மாவட்ட அளவில் ஆதரவு திரட்டி வருகிறோம். பல முன்னாள் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் இன்னும் அவரது தொடர்பில் உள்ளனர்.

அதிமுக - பாஜக கூட்டணி குறித்து குழப்பம் நிலவுகின்ற நிலையில், செங்கோட்டையன் - ஓபிஎஸ் - டிடிவி தினகரன் மூவரும் புதிய கூட்டணி உருவாக்கும் சாத்தியங்களும் அதிகமாக உள்ளது.
குறிப்பாக தவெகவும் அதில் இணையும் வாய்ப்பு உண்டு என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.