உங்களால் நிரூபிக்க முடியுமா? தவெக செங்கோட்டையன் ஆவேசம்
பிளாக்கில் தவெக தலைவர் சம்பளம் வாங்கியிருந்தால், அதனை நிரூபித்து விட்டு பேசட்டும் என ஆவேசமாக பதிலடி கொடுத்துள்ளார் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்.
நடந்து முடிந்த தவெக கட்சியின் மூன்றாம் ஆண்டு தொடக்க விழாவில் பேசிய விஜய், ஆளும் கட்சியான திமுக-வை விமர்சித்து பேசியிருந்தார்.
அத்துடன் பாஜக தலைமையில் மற்றும் பலர் என அதிமுகவின் பெயரை கூட உச்சரிக்காமல் விமர்சித்திருந்தார், தொடர்ந்து அதிமுக-வையும் ஊழல் கட்சி என பேசிவருகிறார்.
இதனால் கோபமடைந்த அதிமுக-வின் முக்கிய புள்ளிகள், தவெக வை கடந்த சில நாட்களாக கடுமையாக பேசி வருகின்றனர்.
முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசுகையில், விஜய் ஊழல்வாதி கிடையாதா? அவர் சம்பளம் வெள்ளையா? கருப்பா? வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தவர் செங்கோட்டையன். ஆதவ் அர்ஜுனா நேர்மையான வழியில் சம்பாதித்துள்ளாரா? என கேள்விகளை அடக்கினார்.

இதற்கு பதிலளித்துள்ள தவெக முக்கிய புள்ளி செங்கோட்டையன், உங்களுக்கே திண்டுக்கல் சீனிவாசன் எப்படிப்பட்டவர் என்பது தெரியும்.
பிளாக்கில் தவெக தலைவர் சம்பளம் வாங்கியிருந்தால், அதனை நிரூபித்து விட்டு பேசட்டும். எது வேண்டுமானாலும் பேசலாம் என்று பேசக்கூடாது.
பிள்ளையார் சுழி போட்டாச்சு. கொடி பறக்குது என்றெல்லாம் யார் பேசியிருந்தார்கள். கூட்டணிக்கு வரவில்லை என்றால் இப்படியெல்லாம் பேசுகிறார்கள், எல்லாம் மறந்து விட்டார்களா என கேள்வி எழுப்பியுள்ளார்.