தவெக விழாவில் முருகன் பாடல் சர்ச்சை - பாடகர் வேல்முருகன் விளக்கம்

Vijay Velmurugan
By Pavi Feb 04, 2026 08:48 AM GMT
Report

தமிழக வெற்றி கழகம் விழாவில் முருகன் பாடல் பாடப்பட்டது சர்ச்சையான நிலையில், தற்போது பாடகர் வேல்முருகன் விளக்கமளித்துள்ளார்.

முருகன் பாடல் சர்ச்சை

சமீபத்தில் நடந்து முடிந்த தவெக - வின் 3ம் ஆண்டு தொடக்க விழாவில் கலந்துகொண்ட விஜய், கொள்கை தலைவர்களுக்கு மரியாதை செலுத்தினார்.

இதன்போது விஜய் கட்சி கொடியையும் ஏற்றி வைத்தார், பாடகர் வேல்முருகனின் இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது, இதில் விஜய் உற்சாகமாக நடனமாடினார்.

தவெக விழாவில் முருகன் பாடல் சர்ச்சை - பாடகர் வேல்முருகன் விளக்கம் | Murugan Song Controversy Singer Velmurugan Talk

இதன்போது பாடகர் வேல்முருகன் பிரசித்தி பெற்ற முருக பக்தி பாடல் மருதமலை மாமணியே பாடலை தவெக கட்சி தலைவர் விஜய்யை புகழ்ந்து பாடியதாக குற்றால்நாதன் வழக்கறிஞர் குற்றம் சாட்டியுள்ளார்.

“வருவாய் குகனே” என்ற பக்தி வரிகளை மாற்றி, “வருவாய் எங்கள் தளபதியே! வருவாய் எங்கள் தமிழக வெற்றி கழகமே!” என்று பாடியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதனால், முருக பக்தர்களின் மத உணர்வுகள் புண்பட்டதாகவும், மத மோதலை தூண்டும் வாய்ப்பு உள்ளது என்றும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த குற்றம் சாட்டப்பட்டதற்கு வேல்முருகன் விளக்கம் அளித்துள்ளார்.

தவெக விழாவில் முருகன் பாடல் சர்ச்சை - பாடகர் வேல்முருகன் விளக்கம் | Murugan Song Controversy Singer Velmurugan Talk

பாடகர் வேல்முருகன் விளக்கம்

பாடகர் வேல்முருகன் பாடலை மக்கள் மகிழ்வுக்காக மட்டுமே பாடியதாக கூறியுள்ளார். அவர் பாடிய பாடலுக்கும் விஜய்க்கும், தமிழக வெற்றி கழகத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என உறுதியாக கூறி உள்ளார்.

இந்த செயலை தவறாக புரிந்திருந்தால் அவர் சம்பந்தப்பட்டவர்களிடம் மன்னிப்பு கேட்க தயார் எனவும் கூறியுள்ளார். அவர் இதனை பாராட்டு, பதவிப்பணிக்கு பயன்படுத்திய நோக்கத்துடன் பாடவில்லை என தெளிவுபடுத்தியுள்ளார்.