செங்கோட்டையனுக்கு தவெகவில் இந்த பதவியா - வரவேற்ற விஜய்!
செங்கோட்டையனுக்கு த.வெ.க.வில் நிர்வாகக்குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
தவெகவில் பதவி
செங்கோட்டையன் தனது ஆதரவாளர்களுடன் இன்று பனையூரில் உள்ள த.வெ.க. அலுவலகத்திற்கு செங்கோட்டையன் வருகை தந்தார்.

ஆதவ் அர்ஜுனா மற்றும் புஸ்சி ஆனந்த் ஆகியோர் அவரை வரவேற்றனர். பின் தவெக தலைவர் விஜய்யை சந்தித்து முன்னாள் எம்பி சத்யபாமா உள்ளிட்ட , 50 -க்கும் மேற்பட்ட ஆதரவாளர்களுடன் தவெகவில் இணைந்தார்.
விஜய் வீடியோ
தொடர்ந்து அவருக்கு தவெகவில் நிர்வாகக்குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கப்படுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் 4 மாவட்டங்களுக்கு (கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி) அமைப்பு பொதுச்செயலாளர் பதவியும் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதற்கிடையில் புதுச்சேரி பாஜக முன்னாள் தலைவர் சாமிநாதன் மற்றும் காரைக்கால் முன்னாள் எம்.எல்.ஏ ஹசனாவும் விஜய் முன்னிலையில் தவெகவில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தவெகவில் இணைந்த செங்கோட்டையனை வரவேற்கும் விதமாக, நடிகர் விஜய் வீடியோ வெளியிட்டுள்ளார்.