மனவேதனையா இருக்கு; சொல்ல ஒன்னும் இல்ல.. செங்கோட்டையன் பரபர பேட்டி!
அதிமுகவில் இருந்து நீக்கியது மனவேதனை தருவதாக செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
செங்கோட்டையனை நீக்கம்
அதிமுக அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் செங்கோட்டையனை நீக்கி, அக்கட்சி பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

தொடர்ந்து கடந்த இரண்டு தினங்களாக செங்கோட்டையன், விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையப்போகிறார் எனும் தகவல்கள் பரவி வருகின்றன. இந்நிலையில், கோவையில் இருந்து செங்கோட்டையன் சென்னைக்கு வந்துள்ளார்.
தவெகவில் கூட்டணி
தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாகவும், அதனைத் தொடர்ந்து விஜயைச் சந்தித்து அவர் முன்னிலையில், தவெகவில் இணைய இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

முன்னதாக கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த செங்கோட்டையன், “50 ஆண்டு கால அரசியல் வரலாற்றில், ஏற்றத்தாழ்வுகளைச் சந்தித்து, இந்த இயக்கத்திற்காக உழைத்து எனக்கு கொடுக்கப்பட்டிருக்கும் பரிசு, அடிப்படை உறுப்பினராக இருக்கக் கூடாது என்பதே.
அதிமுகவில் இருந்து நீக்கியது மனவேதனை தருகிறது. இதற்குமேல் சொல்வதற்கு ஒன்றும் இல்லை” எனத் தெரிவித்தார்.