இபிஎஸ்-க்கு 10 நாள் கெடு - செங்கோட்டையன் அறிவிப்பு!
செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாட்கள் கெடு விதித்துள்ளார்.
அதிமுக ஒருங்கினைப்பு
கோபி கரட்டூர் ரோட்டில் உள்ள கோபி புறநகர் மேற்கு மாவட்ட கட்சி அலுவலகத்தில் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், எம்.ஜி.ஆர் 1972ல் அதிமுகவை தொடங்கியபோது அதிமுகவின் கிளை செயலாளராக பணியாற்றினேன்.
செங்கோட்டையன் பேட்டி
1975ல் கோவையில் நடைபெற்ற பொதுக்குழுவில் என்னை பொருளாளராக நியமித்தார். அதிமுக உடைந்து விடக்கூடாது என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். பிரிந்து சென்றவர்களை இணைக்க எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாட்கள் கெடு.
அதிமுகவை எடப்பாடி பழனிச்சாமி ஒருங்கிணைக்கவில்லையென்றால் நாங்கள் ஒருங்கிணைப்போம். கழகம் ஒன்றிணைக்கப்பட வேண்டும் என பொதுச்செயலாளர் அவர்களிடம் 6 பேர் பேசினோம்.
ஆனால் அதை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை என தெரிவித்துள்ளார்.