கன்னத்தில் அடிக்க வந்த ஜெயக்குமார்; தடுத்த நயினார் நாகேந்திரன் - அவ்வளவு நெருக்கம்!
ஜெயக்குமார், நயினார் நாகேந்திரனை செல்லமாக கன்னத்தில் அடிக்க முயன்ற சம்பவம் கவனம் பெற்றுள்ளது.
ஜெயக்குமார் செயல்
சிட்டி யூனியன் வங்கியின் 120 ஆம் ஆண்டு விழா சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நடைபெற்றது.
இந்த விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பங்கேற்றார். மேலும் பல அரசியல் பிரமுகர்களும் பங்கேற்றனர்.
நயினார் கலகல..
இதில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனுடன் மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் சி.வி. சண்முகம் ஆகியோர் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தனர்.
அப்போது ஜெயக்குமார், நயினார் நாகேந்திரனை செல்லமாக கன்னத்தில் அடிக்க முயன்றார். அவரது கையை நயினார் நாகேந்திரன் பிடித்துக்கொண்டார்.
இவ்வாறு அதிமுக - பாஜக தலைவர்கள் நெருக்கமாக இருக்கும் காட்சி காண்போரை ஈர்த்துள்ளது. பாஜக - அதிமுக இடையே அண்மையில் கூட்டணி உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.