செங்கோட்டையனை அரவணைக்கும் பாஜக - அதிர்ச்சியில் அதிமுக!
செங்கோட்டையன் டெல்லி சென்றது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
செங்கோட்டையன்
டெல்லியிலிருந்து விமானம் மூலம் கோவைக்கு திரும்பிய செங்கோட்டையன், விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, டெல்லியில் மத்திய அமைச்சர்கள் அமித்ஷாவையும், நிர்மலா சீதாராமனையும் சந்தித்ததாக தெரிவித்தார்.
முன்னதாக, ஆடிட்டர் குருமூர்த்தியுடன் ஆலோசனை கலந்ததாகவும் சொல்லப்பட்டது. அதிமுக பொதுச்செயலர் பழனிசாமி ஒருங்கிணைந்த அதிமுக எனும் கருத்துக்கு முற்றிலும் எதிராக இருக்கிறார்.
அதிமுக அதிர்ச்சி
இதனைத் தொடர்ந்துதான் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வமும் அமமுக பொதுச்செயலர் தினகரனும் பாஜக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தனர். இதற்கிடையில் செங்கோட்டையனின் செயல்பாடுகள் அதிமுகவினருக்கு பெரும் அதிர்ச்சியைத் தந்துள்ளது.
அதிமுகவை ஒருங்கிணைப்பதையும், திமுகவுக்கு எதிரான அனைத்து கட்சிகளையும் ஒன்றிணைப்பதையுமே தேர்தல் வியூகமாக அமித் ஷா கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.