மன்னிப்பு கேட்ட செங்கோட்டையன் - சர்ச்சை பேச்சால் வருத்தம்!
ஆர்பி உதயகுமாரின் தாயார் மறைவு குறித்த பேச்சுக்கு செங்கோட்டையன் மன்னிப்பு கோரியுள்ளார்.
சர்ச்சை பேச்சு
கோபி குள்ளம்பாளையத்தில் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, ஆர்.பி.உதயகுமாரின் தாயார் மரணமடைந்து இருக்கிறார்.
முதலில் அவரை அதை பார்க்க சொல்லுங்கள். நீண்ட நாள் இந்த இயக்கத்தில் நான் இருக்கிறேன். என்னிடம் கட்சி தலைமை விளக்கம் கேட்டிருக்க வேண்டும். ஆனால் கேட்கவில்லை என்பதுதான் எனக்கு வேதனை” என்று தெரிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து ஆர்பி உதயகுமார் தாயார் மறைவு குறித்த செங்கோட்டையனின் பதில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், அதன்பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய செங்கோட்டையன், “ஆர்பி உதயகுமார் தொடர்பாக கேட்டார்கள்.
செங்கோட்டையன் மன்னிப்பு
அப்போது சொன்ன கருத்துக்கு மன்னிக்க வேண்டும். அவர் துக்கத்திலேயே தாயை இழந்து கண்ணீரில் மல்கி கொண்டிருந்த போது, அவரது குடும்பத்தினரை நேரில் சந்திக்க இயலவில்லை. அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
அவருடைய தாயை இழந்து துக்கத்திலும், துயரத்திலும் இருக்கும் இந்த வேளையில், தாயின் அருமை பெற்ற மகனுக்கு மட்டுமே தெரியும்.
துக்கத்தில் கலந்து கொள்ளவில்லை என்றாலும், அவர் ஆத்மா சாந்தியடைய அனைவர் சார்பாக கண்ணீர் அஞ்சலியை செலுத்திக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.