ஈபிஎஸ்-ஐ முதல்வர் வேட்பாளராக ஏற்க தயாரா? ஓபிஎஸ் சொன்ன பதில்!
அதிமுக ஒருங்கிணைப்பு விவகாரத்தில் நான் எந்த நிபந்தனையும் வைக்கவில்லை என கூறியுள்ளார்.
முதல்வர் வேட்பாளர்
மதுரையில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “அதிமுக ஒருங்கிணைப்பு விவகாரத்தில் நான் எந்த நிபந்தனையும் வைக்கவில்லை.
அதிமுகவை ஒன்றிணைக்க முழு ஒத்துழைப்பு தருவேன். அதிமுக ஒன்றிணைய வேண்டும், அதற்கு செங்கோட்டையன் எடுத்துள்ள முயற்சி, வெற்றி பெற வேண்டும். அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, நிரந்தர எதிரியும் இல்லை.
ஓபிஎஸ் பதில்
பொறுத்திருந்து பாருங்கள். எதிர்காலத்தில் எதுவும் நடக்கலாம். அதிமுக ஒன்றிணைய வேண்டும் என யார் எந்த முயற்சி எடுத்தாலும் ஆதரிப்பேன். ஈபிஎஸ் உடனான பிரச்சனை குறித்து டிடிவி தினகரனிடம் கேளுங்கள்,
என்னிடம் கேட்காதீர்கள். எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்கக்கூடாது என்பது நல்ல கருத்துதான் செங்கோட்டையனிடம் தினமும் பேசிக் கொண்டுதான் இருக்கிறேன்.
சில பிரச்சனைகள் இன்னும் தீர்க்கப்படவில்லை. பல்வேறு விவகாரங்கள் குறித்து பேச வேண்டியுள்ளது” என தெரிவித்துள்ளார்.

விடுதலைப்புலிகளின் பணத்திற்கு என்ன நடந்தது..! கே. பி - கோட்டா டீல்: அம்பலப்படுத்தும் பொன்சேகா IBC Tamil
