செங்கோட்டையன் அடித்த திடீர் பல்டி; பொறுத்திருந்து பாருங்க - பரபரப்பு தகவல்
அதிமுக ஒன்றிணைவது குறித்து கட்சி தலைமைக்கு கெடு விதிக்கவில்லை என செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
அதிமுக ஒன்றினைப்பு
அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் இணைக்க வேண்டும். இதற்கான பணிகளை எடப்பாடி பழனிசாமி மேற்கொள்ள வேண்டும்.

அப்படி மேற்கொள்ளவில்லை என்றால், ஒருங்கிணைக்கும் பணிகளை நான் மேற்கொள்வேன். 10 நாள்களுக்குள் இது நடக்கவில்லை என்றால் தேர்தல் சுற்றுப்பயணத்தில் பங்கேற்க மாட்டேன்.
யாரை இணைக்க வேண்டும் என்பதை பொதுச் செயலாளர் முடிவு செய்துகொள்ளலாம் என்று எடப்பாடி பழனிசாமிக்கு, செங்கோட்டையன் கெடு விதித்திருந்தார். இந்தக் கருத்துக்கு சசிகலா, டிடிவி தினகரன், ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் ஆதரவு தெரிவித்தனர்.
செங்கோட்டையன் பேட்டி
இந்நிலையில், விரைவில் நல்லது நடக்கும். அதிமுக ஒன்றிணைவது குறித்து கட்சி தலைமைக்கு 10 நாட்கள் கெடு விதிக்கவில்லை. ஊடகங்கள்தான் அதனை தவறாக புரிந்து கொண்டது. 10 நாட்களில் பேச்சுவார்த்தை தொடங்க வேண்டும்.

ஒன்றரை மாதத்தில் முடிவு எடுக்க வேண்டும் என்றுதான் தெரிவித்தேன் என கோபி செட்டிபாளையத்தில் அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
தொடர்ந்து அவரிடம், ராணுவ கட்டுப்பாட்டோடு இருந்த கட்சி சிதைந்து விட்டதா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், அது உங்கள் கருத்து. பொறுத்திருந்து பாருங்கள் என தெரிவித்துள்ளார்.