பாஜக பாட்டுக்கு டான்ஸ் ஆடக் கூடிய நடிகர் கிடைச்சுருக்காரு - விளாசிய கருணாஸ்
பாஜகவின் பாட்டுக்கு ஆடும் நபராக நடிகர் கிடைத்திருக்கிறார் என கருணாஸ் விமர்சித்துள்ளார்.
விஜய் தலைவரா?
முக்குலத்தோர் புலிப்படைக் கட்சித் தலைவர் கருணாஸ் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
“விஜய் மக்களுக்கான தலைவரா என்று அவரை பின் தொடரும் ரசிகர்களும் ,தொண்டர்களும் புரிந்து கொள்ளவேண்டும். பாஜக Compose செய்த பாட்டுக்கு டான்ஸ் ஆட ஒரு நடிகர் கிடைத்திருக்கிறார்.
கருணாஸ் விமர்சனம்
விரைவில் பாடல் ரெடியாகும் என நினைக்கிறேன். விரைவில் ஆடத்தொடங்குவார். பனையூர் கேட்டின் பூட்டு வெளியே போட்டுருக்கா? உள்ளெ போட்டிருக்கா? என நீங்கள்தான் பார்க்க வேண்டும்.
பாஜகவினர் என்றுமே, எதிலுமே நேரடியாக வர மாட்டார்கள், சந்தில் சிந்து பாட நினைப்பார்கள். எடப்பாடி தன்னோட சுயநலத்திற்க்காக அதிமுக கட்சியை அடமானம் வைப்பதற்கு கூட தயங்க மாட்டார்.
அதிமுக கூட்டத்தில் வேறு கட்சியைக் கொடியைக் காட்டும் அளவுக்கு கட்சியை அவலநிலையில் வைத்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி என விமர்சித்துள்ளார்.