அல்லோலப்படுத்தும் சிறுத்தை; பயத்தில் மக்கள்- திணறும் வனத்துறை கூண்டில் சிக்குமா?
மயிலாடுதுறையை அடுத்து அறியலூருக்கு சென்ற சிறுத்தையால் மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.
படுத்தும் சிறுத்தை
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள செம்மங்குளம் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருந்து வந்தது இதனால் மக்கள் பெரும் அச்சத்தில் இருந்தனர். இதையடுத்து அங்குள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு, பொதுமக்களை யாரும் வெளியே வரவேண்டாம் என்று வனத்துறை சார்பில் எச்சரிக்கை விடப்பட்டது.
இதனை தொடர்ந்து, அரியலூர் மாவட்டம் பொன்பரப்பி பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி, அங்கு விரைந்து சென்று தேடுதல் வேட்டையில் இறங்கினர். அப்போது அரசு மருதத்துவமனையில் சிறுத்தை தென்பட்டதை வனத்துறை உறுதி செய்தனர்.
கூண்டில் சிக்குமா?
அங்குள்ள சிசிடிவி காட்சிகளில் சிறுத்தை கம்பி வேலியைத் தாண்டி சென்றிருந்தது பதிவாகியிருந்தது. மருத்துவர் வீட்டின் அருகே சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று காவல்துறை எச்சரித்து உள்ளனர்.
இதனையடுத்து, வனத்துறை, தீயணைப்பு துறை, வருவாய் துறை, காவல் துறையினர் இணைந்து 2 குழுக்களை அமைத்து தீவிரமாக தேடுகின்றனர். இந்த நிலையில், செந்துறையில் ஒரு பெரிய கூண்டில் பன்றி மற்றும் ஆடு வைத்து வனத்துறையினர் காத்திருக்கின்றனர்.
நின்னியூர் கிராமத்தில் உள்ள குட்டையில், சிறுத்தை தண்ணீர் குடித்த அடையாளம் கண்டறியப்பட்டுள்ளது. எனவே,உணவை தேடி சிறுத்தை வரும்பட்சத்தில் அதனை பிடிக்க வனத்துறை அதிகாரிகள் முகாமிட்டு காத்திருக்கின்றனர்.