பிரதமர் மோடிக்கு நேரடியாக பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கணுமா? அப்போ இதை செய்யுங்க.!
பிரதமர் மோடியின் பிறந்தநாளில் வாழ்த்து தெரிவிக்க புதிய ஆப் வசதி வந்துள்ளது.
பிறந்தநாள் வாழ்த்து
பிரதமர் நரேந்திர மோடியின் 73-வது பிறந்தநாளையொட்டி, மத்திய அரசு மற்றும் பாஜக சார்பில் பல்வேறு திட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் பல்வேறு இடங்களில் பொதுமக்களும் பாஜகவினரும் கேக் வெட்டி உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
ஆட்டோ ஓட்டுநர்கள், ஒரு நாள் முழுவதும் இலவசமாக வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்க முடிவு செய்துள்ளனர். இதே போன்று ஓவியம் வரைந்து வாழ்த்து தெரிவிப்பது, மணல் சிற்பம் அமைத்து வாழ்த்து தெரிவிப்பது போல பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர்.
ஆப் மூலம் வாழ்த்து
இந்நிலையில், பிரதமருக்கு ஆப் மூலமாக வாழ்த்து தெரிவிப்பதற்காக நமோ ஆப் வசதி வந்துள்ளது. இதன் மூலமாக யார் வேண்டுமானாலும் பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்க முடியும். தனியாகவோ அல்லது குடும்பமாகவோ பிரதமர் மோடிக்கு வீடியோ மூலம் தங்கள் வாழ்த்துகளை தெரிவிக்கலாம். அதாவது ரீல் வடிவில் பதிவு செய்து, நேரடியாக NaMo செயலியில் பதிவேற்றி, பிரதமர் மோடிக்கு அனுப்ப அனுமதிக்கும்.
அந்த ஆப்-ல், "NaMo செயலியில் 'Modi Story of Bharat Mata's Devoted Son' பிரச்சாரத்தின் முகப்புப் பக்கத்திலிருந்து 'Seva Pakhwada ' பேனரைக் கிளிக் செய்து, உங்கள் வீடியோ வாழ்த்துக்களை பதிவேற்ற அல்லது பதிவு செய்ய 'வீடியோவைப் பதிவேற்று' பட்டனை கிளிக் செய்யவும்.
உங்கள் வீடியோவைப் பதிவுசெய்த பிறகு, 'நெக்ஸ்ட்' என்பதைக் கிளிக் செய்து, வீடியோ வாழ்த்து வகையைத் தேர்ந்தெடுத்து, பின் 'போஸ்ட் வீடியோ' என்பதைக் கிளிக் செய்யவும். குடிமக்கள் இடுகையிட்ட விருப்பங்களைக் காண 'வீடியோ பகுதி' கிளிக் செய்து பார்க்கவும்.