பிரதமர் மோடிக்கு 4 வார்த்தையில் ராகுல்காந்தி பிறந்தநாள் வாழ்த்து
பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியின் 71-வது பிறந்ததினம் இன்று கொண்டாடப்படுகிறது. பிரதமர் மோடி கடந்த 2014ம் ஆண்டு பிரதமராகப் பொறுப்பேற்றார். அன்றுமுதல் அவரின் ஒவ்வொரு ஆண்டு பிறந்தநாளும் சேவைநாளாகக் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் பிரதமர் மோடிக்கு பல்வேறு தலைவர்களும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்,அந்த வகையில் பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Happy birthday, Modi ji.
— Rahul Gandhi (@RahulGandhi) September 17, 2021
இது குறித்து ராகுல் காந்தி தனது ட்வீட்டர் பதிவில் "இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மோடி ஜி" என்று மட்டும் தெரிவித்துள்ளார். வேறு எதையும் அவர் குறிப்பிடவில்லை.