ரூ 1 கோடி நஷ்ட ஈடு வேணும் - விஜயலெட்சுமி, வீரலெட்சுமிக்கு சீமான் நோட்டீஸ்!
நடிகை விஜயலட்சுமியிடம், ரூ 1 கோடி நஷ்ட ஈடு கேட்டு சீமான் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
நடிகை விஜயலட்சுமி
நடிகை விஜயலட்சுமி புகார் தொடர்பாக சீமானிடம் போலீசார் விசாரணை நடத்த முடிவு செய்து சம்மன் அனுப்பினர். இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆஜராகவில்லை.
சீமானுக்கு பதிலாக வளசரவாக்கம் காவல்நிலையத்தில் நாம் தமிழர் கட்சி வழக்கறிஞர் பிரிவு செயலாளர் சங்கர் ஆஜராகி புகார் தொடர்பாக விளக்கம் அளித்ததாக கூறப்படுகிறது.
சீமான் நோட்டீஸ்
இந்நிலையில், சீமானின் நீலாங்கரை வீட்டுக்கு நேரில் சென்ற போலீஸார் அவரிடம் சம்மன் கொடுக்க முயன்றனர். ஆனால் அதை அவர் வாங்கவில்லை. இதனால் போலீஸார் அந்த சம்மனை வீட்டு வாசலில் ஒட்டி வைத்துவிட்டு வந்துவிட்டனர்.
தொடர்ந்து, தன்னை பற்றி பொதுவெளியில் அவதூறாக பேசிய நடிகை விஜயலட்சுமி, அவருக்கு துணையாக நிற்கும் தமிழர் முன்னேற்ற படை அமைப்பை சேர்ந்த வீரலட்சுமி ஆகிய இருவருக்கும் ரூ 1 கோடி கேட்டு மான நஷ்ட நோட்டீஸை சீமானின் வழக்கறிஞர் அனுப்பியுள்ளார்.
இந்த நோட்டீஸ் கிடைத்த 15 நாட்களுக்குள் பகிரங்கமாக மன்னிப்பு கேட்காவிட்டால் இருவர் மீதும் வழக்கு தொடர போவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.