ஆண்ட்ரியா, ரீமா செனை ஆடையின்றி நிற்கவைத்தேன்; இதனால்தான் - பிரபல இயக்குநர் ஓபன்டாக்!
இயக்குநர் செல்வராகவன் திரைப்படம் குறித்த தகவல்களை மனம் திறந்துள்ளார்.
செல்வராகவன்
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வந்தவர் செல்வராகவன். காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, நானே வருவேன், புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, இரண்டாம் உலகம், நெஞ்சம் மறப்பதில்லை என பல ஹிட் படங்களை கொடுத்தார்.
இதற்கிடையில் நடிகை சோனியா அகர்வாலை திருமணம் செய்து இருவரும் பிரிந்து விட்டனர். தொடர்ந்து, பீஸ்ட், பகாசூரன், பர்ஹானா, மார்க் ஆண்டனி, நானே வருவேன், சாணிக்காயிதம் உள்ளிட்ட படங்களில் நடிப்பிலும் கலக்கியுள்ளார். இதில் ஆயிரத்தில் ஒருவன் மாறுபட்ட திரைக்களத்தில் நல்ல வரவேற்பை பெற்றது.
ஆயிரத்தில் ஒருவன்
இதில் கார்த்தி, ரீமாசென், ஆண்ட்ரியா முக்கிய கேரக்டரில் நடித்திருந்தனர். தற்போது, 7ஜி ரெயின்போ காலனி 2ம் பாகம் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்நிலையில் முன்னதாக இவர் அளித்த பேட்டி ஒன்றில்,
ஆயிரத்தில் ஒருவன் குறித்து பேசுகையில், புலியை காமிக்கணும்னா அவங்க சட்டையை கழட்டிதானே காமிக்கணும். சட்டையை கழட்டாம காமிக்க முடியாது. முதல்ல அவங்க எல்லாரையும் செக் பண்ணனும். ஒரு தீபத்தை வெச்சு அவரு எதுக்கு செக் பண்ணாருன்னா, வந்தவங்களுக்கு ஏதாவது நோய் இருந்தா என்னாகறது.
ஆல்ரெடி அவங்க எல்லோரும் கஷ்டத்தில் இருக்கிறார்கள். இதுல தொற்று நோய் ஏதும் வந்தால். அந்த அளவுக்கு அவங்க அட்வான்ஸா இருந்துருக்காங்கன்னு சொல்ல வர்றேன், என்று தெளிவுபடுத்தி இருக்கிறார். இதனால்தான் ரீமா சென், ஆண்ட்ரியாவை ஆடையின்றி அந்த காட்சியில் நிற்க வைத்தேன் எனத் தெரிவித்துள்ளார்.
You May Like This Video