அப்படி ஃபீலிங்கே வரமாட்டிங்குது; இதுதான் காரணம் - ஆண்ட்ரியா வெளிப்படை!
திருமணம் குறித்த தகவல்களை நடிகை ஆண்ட்ரியா பகிர்ந்துள்ளார்.
நடிகை ஆண்ட்ரியா
பச்சைக்கிளி முத்துச்சரம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை ஆண்ட்ரியா. அந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஆயிரத்தில் ஒருவன், விஸ்வரூபம் படங்களில் கலக்கினார். இதன் மூலம் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.
அதன்பின், தரமணி, துப்பறிவாளன், வட சென்னை, வலியவன், அரண்மனை, என்றென்றும் புன்னகை, மாஸ்டர் உள்ளிட்ட படங்களில் நடித்தார். இறுதியாக பிசாசு 2 படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டே முடிந்த நிலையில் படம் எப்போது வெளியாகும் என்ற அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை.
திருமணம்?
இந்நிலையில், இவர் அளித்த சமீபத்திய பேட்டி ஒன்றில், எல்லாருக்குமே ஒரு குறிப்பிட்ட வயதை எட்டியவுடன் திருமணம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். அதுவும் எனக்கு 30 வயதை எட்டியவுடன் அதுதான் தோன்றியது. ஆனால் இப்பொழுது அந்த எண்ணமே எனக்கு வரவில்லை.
அந்த வயசையும் தாண்டி விட்டேன். மேலும் இப்படி இருக்கிறதால் எனக்கு எந்த சோகமும் இல்லை. திருமணமாகி சில பேர் சந்தோஷம் இல்லாமலும் இருக்கிறார்கள்.
அதற்கு திருமணமாகாமலேயே சந்தோஷமாக இருந்து விடலாம்.அதனால் இப்போதைக்கு திருமணம் பற்றி எந்த ஐடியாவும் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.