முல்லைப் பெரியாறு அணை..அமைச்சர் சுரேஷ் கோபிக்கு செல்வப்பெருந்தகை கண்டனம்!

Tamil nadu BJP India K. Selvaperunthagai
By Swetha Aug 19, 2024 11:30 AM GMT
Report

முல்லைப் பெரியாறு அணை குறித்த சுரேஷ் கோபியின் பேச்சுக்கு செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார்.

செல்வப்பெருந்தகை 

இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில், கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஒன்றிய பா.ஜ.க. அமைச்சர் சுரேஷ்கோபி, முல்லைப் பெரியாறு அணை குறித்து மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்துகிற வகையில் விஷமத்தனமான கருத்துகளை கூறியிருக்கிறார்.

முல்லைப் பெரியாறு அணை..அமைச்சர் சுரேஷ் கோபிக்கு செல்வப்பெருந்தகை கண்டனம்! | Selvaperunthagai Talks About Mullaperiyardam Issue

இதுகுறித்து அவர் கூறும் போது, 'முல்லைப் பெரியாறு அணை தற்போது பாதுகாப்பானதாக இல்லை. எனவே, இந்த அணைக்கு பதிலாக அருகில் புதிய அணை கட்ட வேண்டும். முல்லைப் பெரியாறு அணை இடிந்தால் யார் பொறுப்பு? நீதிமன்றம் பதில் சொல்லுமா?

அல்லது நீதி மன்றங்களில் இருந்து அத்தகைய முடிவுகளை பெறுபவர்கள் பொறுப்பேற்பார்களா? இனியும் கேரளாவால் கண்ணீரில் மூழ்கியிருக்க முடியாது" என்ற வகையில் பேசி இடுக்கி மாவட்ட மக்களிடையே அச்சத்தையும், பீதியையும் ஏற்படுத்தி இருக்கிறார்.

உச்சநீதிமன்ற தீர்ப்புகள் தமிழ்நாட்டின் உரிமைக்கு பாதுகாப்பாக இருக்கும்போது கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஒன்றிய பா.ஜ.க. அமைச்சர் தமிழ்நாட்டின் நலன்களுக்கு விரோதமாக இத்தகைய கருத்துகளை கூறுவதை எவரும் ஏற்றக்கொள்ள முடியாது. ஒன்றிய அமைச்சர் சுரேஷ் கோபி கேரள மாநிலத்திற்கு மட்டும் அமைச்சரா?

இதை பிரேமலதா விஜயகாந்த் நிறுத்திக்கொள்ள வேண்டும் - செல்வப்பெருந்தகை!

இதை பிரேமலதா விஜயகாந்த் நிறுத்திக்கொள்ள வேண்டும் - செல்வப்பெருந்தகை!

முல்லைப் பெரியார்

இந்தியா முழுமைக்குமான அமைச்சரா என்பதை தெளிவுபடுத்த வேண்டும். ஒன்றிய அமைச்சர் சுரேஷ் கோபின் பேச்சு குறித்து பிரதமர் மோடி தலையிட்டு ஒன்றிய அரசின் நிலையை தெளிவுபடுத்த வேண்டும். இந்த கருத்து ஒன்றிய அமைச்சரின் கருத்தா?

முல்லைப் பெரியாறு அணை..அமைச்சர் சுரேஷ் கோபிக்கு செல்வப்பெருந்தகை கண்டனம்! | Selvaperunthagai Talks About Mullaperiyardam Issue

பிரதமர் மோடி அரசின் கருத்தா என்பதை அறிந்து கொள்ள தமிழ்நாட்டு மக்கள் விரும்புகிறார்கள். ஏற்கனவே காவிரி பிரச்சனையில் அண்டை மாநிலமான கர்நாடகத்தோடு உரிமைகளுக்காக போராடிக் கொண்டிருக்கிற நேரத்தில் இன்னொரு அண்டை மாநிலமான கேரள மாநிலத்துடன் போராடுகிற நிலைக்கு

ஒன்றிய அமைச்சர் சுரேஷ்கோபி தள்ளியிருப்பது மிகுந்த கண்டனத்திற்குரியது.எனவே, மாநில உரிமைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிற தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஒன்றிய அமைச்சர் சுரேஷ் கோபியின் முல்லைப் பெரியாறு அணை குறித்த கருத்தை பிரதமர் மோடியின் கவனத்திற்கு கொண்டு வர வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.