வயநாடு நிலச்சரிவிலும் பாஜக அரசியல் செய்கிறது - செல்வப்பெருந்தகை ஆவேசம்
வயநாட்டு நிலச்சரிவில் பாஜக அரசியல் செய்வதாக தமிழ்நாடு மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை குற்றஞ்சாட்டியுள்ளார்.
செல்வப்பெருந்தகை
தேனியில் பல்வேறு கட்சியினரைச் சேர்ந்த சுமார் 3,000 பேர் காங்கிரஸ் கட்சியில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கலந்து கொண்டார்.
இதன் பின் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் பேசிய செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் கட்சி பலமாக உள்ளது. அதனை மேலும் பலப்படுத்த ஒவ்வ்வொரு மாவட்டமாக சுற்றுப்பயணம் செய்து வருகிறோம்.
பாஜக
காங்கிரஸ் கட்சியை பலப்படுத்தி வருகிறோம். எங்கெங்கெல்லாம் கட்சிக்கு செல்வாக்கு இருக்கின்றதோ அங்கெல்லாம் போட்டியிடுவோம்" என தெரிவித்தார்.
மேலும், வயநாடு நிலச்சரிவு விஷயத்தில் பாஜக அரசியல் செய்து வருகிறது. நிலச்சரிவு ஏற்படும் என முன்பே தெரிந்திருந்த அமித்ஷா அந்த மக்களை பாதுகாக்க ஏன் மத்திய கமாண்டோ படைகளை அனுப்பவில்லை? ஏன் நிலச்சரிவு முன்னெச்சரிக்கையை பொதுமக்களிடம் வெளிப்படையாக சொல்லவில்லை? இதனை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
வயநாட்டில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு காங்கிரஸ் சார்பில் வீடு கட்டி தருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்றார். ஜனநாயாகத்தை காக்க யாரேனும் குரல் கொடுத்தால் அவர்களை அமலாக்கத்துறை, சிபிஐ மூலம் நசுக்கும் வேலையில் பாஜக அரசு இறங்கியுள்ளது என கூறியுள்ளார்.