அம்பானி கடனை தள்ளுபடி செய்யும் அரசு ஏழை மக்களுக்கு எதுவும் செய்யவில்லை - செல்வப்பெருந்தகை
பாஜக அரசு அம்பானி அதானி கடனை தள்ளுபடி செய்யும் ஆனால் ஏழை மக்களுக்கு எதுவும் செய்யவில்லை என செல்வப்பெருந்தகை பேசியுள்ளார்.
பட்ஜெட்
2024-25 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் பாஜகவின் கூட்டணி கட்சிகளான தெலுங்கு தேசம் மற்றும் ஐக்கிய ஜனதா தளம் ஆளும் ஆந்திரா மற்றும் பீகார் மாநிலத்துக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், தமிழ்நாடு முற்றிலும் புறக்கணிக்கப்பட்டதாகவும் எதிர்க்கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டதை கண்டித்து சென்னை அண்ணா சாலையில் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, முன்னாள் தலைவர் தங்கபாலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
செல்வப்பெருந்தகை
ஆர்ப்பாட்டத்தின் போது பேசிய செல்வப்பெருந்தகை, ஆந்திரா, பீகாருக்கு வாரி வழங்கும் மத்திய பாஜக அரசு, தமிழ்நாட்டைப் புறக்கணிக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு தமிழ்நாடு என்கிற மாநிலம் இந்தியாவில் தான் இருக்கிறது என்பதை மறந்து விடக்கூடாது என பேசினார்.
மேலும் மத்திய பட்ஜெட்டில் 2ம் கட்ட மெட்ரோ பணிகளுக்கான நிதியை NDA அரசு ஒதுக்க வில்லை. பெருமழை வெள்ளத்தின் போது தூத்துக்குடி வந்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லைரூ.11,500 கோடி பீகாருக்கு வெள்ள நிவாரண நிதியாக அறிவிக்கும் பாஜக அரசு, தமிழ்நாடு கேட்ட நிதியை ஒதுக்க வில்லை.
ராமர் கோயில் கட்டியும் அயோத்தியில் பாஜகவால் வெற்றி பெற முடியவில்லை. அதானி, அம்பானி ஆகியோரின் கடன்களை தள்ளுபடி செய்யும் பாஜக அரசு, ஏழை மக்களுக்காக எதுவும் செய்யவில்லை;
தமிழ்நாட்டில் சமூகநீதிப் பேசும் கட்சிகள், இடஒதுக்கீடு வேண்டும் என சொல்லக்கூடிய கட்சிகள் பாஜகவின் பக்கம் நிற்கிறார்கள் என பேசியுள்ளார்.