வெளிநடப்பு செய்த மம்தா - நிதி ஆயோக் கூட்டத்தில் நடந்தது என்ன?
நிதி ஆயோக் கூட்டத்தில் பங்குபெற்ற மம்தா பானர்ஜி வெளிநடப்பு செய்துள்ளார்.
நிதி ஆயோக்
மாநிலங்களின் வளர்ச்சிக்கு நிதி ஒதுக்குவது தொடர்பாக 1950 ல் அமைக்கப்பட்ட இந்திய திட்ட கமிஷனை 2014 ம் ஆண்டு பாஜக ஆட்சி அமைந்ததும் நிதி ஆயோக் ஆக மாற்றியது. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மாநில முதல்வர்கள் பங்கு பெரும் நிதி ஆயோக் கூட்டம் டெல்லிலியில் இன்று நடைபெறுகிறது.

மத்திய பட்ஜெட்டில் இந்தியா கூட்டணி ஆளும் மாநிலங்களுக்கு நிதி ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டுவதாக கூறி மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட இந்தியா கூட்டணியை சேர்ந்த மாநில முதலமைச்சர்கள் இந்த கூட்டத்தை புறக்கணித்தனர்.
மம்தா பானர்ஜி
இந்தியா கூட்டணியில் அங்கம் வகித்த திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளதாக அறிவித்து இருந்தார். இந்நிலையில் இந்த கூட்டத்தில் இன்று கலந்து கொண்ட மம்தா பானர்ஜி பாதியிலே வெளிநடப்பு செய்துள்ளார்.

வெளிநடப்பு செய்த பின் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசிய அவர், நிதி ஆயோக் கூட்டத்தில் மற்ற மாநில முதலமைச்சர்களுக்கு அதிக நேரம் ஒதுக்கப்பட்டது ஆனால் எனக்கு 5 நிமிடம் மட்டுமே பேச அனுமதி தரப்பட்டது. என் மாநில பிரச்னைகள் குறித்து பேச முற்பட்டபோது, வாய்ப்பு மறுக்கப்பட்டது. இது எனக்கு ஏற்பட்ட அவமானம் எனவே நான் நிதி ஆயோக் கூட்டத்திலிருந்து வெளியேறினேன் என பேசியுள்ளார்.