Friday, Jul 25, 2025

மின்கட்டண உயர்வுக்கு முந்தைய அதிமுக அரசே காரணம் - செல்வப்பெருந்தகை

ADMK K. Selvaperunthagai
By Karthikraja a year ago
Report

முந்தைய அதிமுக அரசே மின் கட்டண உயர்வுக்கு காரணம் என செல்வேபெருந்தகை பேசியுள்ளார்.

செல்வப்பெருந்தகை

காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் பொதுக்குழு மற்றும் செயல் வீரர் ஆலோசனைக் கூட்டம் வல்லக்கோட்டையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு மாநில காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை கலந்து கொண்டார்.

selvaperunthagai

கூட்டத்திற்கு வந்திருந்த நிர்வாகிகளிடம் கட்சி வளர்ச்சிப்பணி குறித்த ஆலோசனைகளை கேட்டறிந்தார். இதன் பின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். 

நாம் தமிழர் கட்சியுடன் கூட்டணிக்கு பேசிய பாஜக? - மேடையில் போட்டுடைத்த சீமான்

நாம் தமிழர் கட்சியுடன் கூட்டணிக்கு பேசிய பாஜக? - மேடையில் போட்டுடைத்த சீமான்

உதய் மின் திட்டம்

அப்பொழுது அவர் பேசியதாவது, தமிழக பொறியியல் கல்லூரிகளில் பேராசிரியர்கள் எண்ணிக்கையில் முறைகேடு நடந்துள்ளது. அதை அனைவரும் சேர்ந்து தான் சரி செய்ய வேண்டும். தமிழக முதல்வர் ஸ்டாலின் அனைத்துத் துறைகளின் செயல்பாடுகளைக் கூர்ந்து கவனித்து வருகிறார். 

selvaperunthagai

கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் உதய் மின்திட்டத்தில் கையெழுத்திட்டதாலே மின்சார கட்டணம் உயர்ந்துள்ளது. மின்கட்டண விவகாரத்தில், தமிழ்நாடு மின்சார வாரியத்தின் கட்டுப்பாடு அனைத்துமே மத்திய அரசிடம் உள்ளது என பேசினார்.