நாம் தமிழர் கட்சியுடன் கூட்டணிக்கு பேசிய பாஜக? - மேடையில் போட்டுடைத்த சீமான்

Naam tamilar kachchi DMK BJP Seeman
By Karthikraja Aug 04, 2024 12:59 PM GMT
Report

நாம் தமிழர் கட்சியில் கல்லூரி மாணவர்கள் சேர்வதை பார்த்து அரசு அஞ்சுகிறது என சீமான் பேசியுள்ளார்.

கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் தொடர்ந்து நிலவிவரும் படுகொலைகள், சீர்கெட்ட சட்டம்-ஒழுங்கு, மின்கட்டண உயர்வு இவற்றையெல்லாம் கண்டித்து, நாம் தமிழர் கட்சி சார்பாக சென்னை வள்ளுவர்கோட்டத்தில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

seeman protest valluvar kottam

இதில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார். அவர் பேசியதாவது, திமுக ஆட்சியில் ஒரு மாதத்தில் 133 கொலைகள் நடந்துள்ளன. 134-வதாக ஆம்ஸ்ட்ராங் கொலை நடந்துள்ளது.கொலையாளிகள் எல்லோரும் 30 வயதுக்கு கீழ் உள்ளவர்கள். 

அரசியல் மாநாட்டுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல் - அதிரடி முடிவில் விஜய்

அரசியல் மாநாட்டுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல் - அதிரடி முடிவில் விஜய்

38 குழு

இளைஞர்களை திமுக குற்றச் சமூகமாகவே உருவாக்கிவிட்டது. நிறைந்த போதையில் தான் கொலை செய்கின்றனர். இந்தாண்டு மட்டும் 595 கொலைகள் நடந்திருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் குற்றம்சாட்டியுள்ளார்.தமிழகத்தில் யாருக்கும் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. குற்றச்செயல்களுக்கு கடுந்தண்டனை இல்லாததால் குற்றங்கள் தொடர்கின்றன. 

seeman latest photo

எல்லா கொடுஞ்செயல்களுக்கும் குழு அமைக்கிறது இந்த அரசு. கடந்த 3 ஆண்டுகளில் திமுக அரசு 38 குழுக்களை அமைத்துள்ளது. இதில், நீட் தேர்வு தொடர்பான அறிக்கை என்ன ஆனது? தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் குழு அறிக்கை என்ன ஆனது? இதைவிட கொடுங்கோல் ஆட்சியை எங்கும் பார்க்க முடியாது.

கேரளாவில் நிலச்சரிவு ஏற்பட்டதற்கு காரணம் காடுகளை அழித்தது தான் என இப்போது பேசுகிறார்கள். யார் மரங்களை வெட்டியது? காடுகளை அழித்தவர்களே இன்று அதைப்பற்றி பேசுகிறார்கள். நான் பலமுறை சொல்லி வருகிறேன். நான் போதிக்கும்போது உங்களுக்குப் புரியாது, பாதிக்கும்போதுதான் புரியும் எனபி பேசினார்.

திராவிட மாடல்

மேலும், திராவிட மாடல் ஆட்சியை ராமர் ஆட்சி என்று, பெரியார் அசிங்கப்படுத்த முடியாத ராமரை அமைச்சர் ரகுபதி செய்துவிட்டார். திராவிட மாடல் ஆட்சியை ராமர் ஆட்சி என்ற அமைச்சர் ரகுபதியை கண்டித்து ஒரு திமுக தலைவர்களும் பேசவில்லை. வாடகை வாய்களும் பேசவில்லை.

திமுக அரசுக்கு திடீரென முருகனின் மீது எப்படி பாசம் வந்தது?நான் வேல் வேல் வெற்றிவேல் என வேலை தூக்கி திருமுருகப் பெருவிழா நடத்தும்போது முரசொலியில் என்னை திட்டி கட்டுரை எழுதினார்கள். முத்தமிழ் முருகன் மாநாட்டில் குறைந்தது 20 நிமிடங்கள் முதலமைச்சர் ஸ்டாலின் முருகனை பற்றி பேசுவாரா? அருணகிரிநாதர் எழுதியதை பாடவேண்டும்.

கூட்டணி

என் கட்சியில் ஏராளமான இளைஞர்கள் இளம்பெண்கள் சேர்வதை தடுக்கவே புதுமைப் பெண், தவப்புதல்வன் போன்ற திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்துகிறது. கல்லூரி மாணவ மாணவிகள் சீமானை நோக்கி ஓடிவருவதை பார்த்து அஞ்சுகின்றனர். அவர்கள் ஓட்டை பெறுவதற்கு மாதம் மாதம் ரூ. 1000 கொடுக்கிறார்கள். 

தமிழ் தேசியம் பேசும் நாங்கள் பிரிவினைவாதி, தேச துரோகிகள் என்றால் பாஜக ஏன் தெலுங்கு தேசம் கட்சியுடன் கூட்டணி வைத்தது? நான் பிரிவினைவாதி என்றால் எதற்காக என் வீட்டுக்கு வந்து கூட்டணி பேசினீர்கள் என கேள்வி எழுப்பினார்.