ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா.. நிச்சயம் அது நடக்கும் - செல்வப்பெருந்தகை உறுதி!
ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா ஒப்புதலுக்கு செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார்.
தேர்தல்
ஒரே நாடு ஒரே தேர்தல் நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் நவம்பர் 25ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 20ஆம் தேதிவரை நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தொடரில் 16 முக்கிய மசோதாக்களை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய பாஜக அரசு திட்டமிட்டது.
அந்த வகையில், பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவையில் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றனர்.
செல்வப்பெருந்தகை
இந்த நிலையில், 'ஒரே நாடு ஒரே தேர்தல்' மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளநிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அதற்கு கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை எதிர்க்கட்சிகளுடன் இணைந்து நாட்டு மக்களும் எதிர்த்துக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் அதனை கண்டு கொள்ளாமல் எதேச்சதிகார போக்க பாஜக அரசு நாளை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளதை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சார்பில்
வன்மையாக கண்டிக்கிறோம். பா.ஜ.க.வின் இது போன்று மக்கள் விரோத அராஜக போக்கினை நாட்டு மக்களுடன் இணைந்து எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி நிச்சயம் முறியடிப்பார். என்று கூறப்பட்டுள்ளது.