ஒரே நாடு ஒரே தேர்தல் ஒப்புதல்.. குரல்வளையை நெறிக்கும் செயல் - உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!

Udhayanidhi Stalin Tamil nadu Narendra Modi
By Swetha Dec 13, 2024 02:46 AM GMT
Report

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா ஒப்புதலுக்கு துனை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

உதயநிதி 

பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவையில் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது சமூக வலைத்தளப்பக்கத்தில்,

ஒரே நாடு ஒரே தேர்தல் ஒப்புதல்.. குரல்வளையை நெறிக்கும் செயல் - உதயநிதி ஸ்டாலின் கண்டனம்! | Deputy Cm Udhayanidhi Slams One India One Election

ஒரே நாடு - ஒரே தேர்தல்’ மசோதாவுக்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் கொடுத்திருப்பது இந்திய ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கும் செயல். ஒன்றியத்திலும் மாநிலங்களிலும் சர்வாதிகாரத்திற்கு களம் அமைக்கும் சதித்திட்டம் இது.

சாத்தியமில்லாத கொடூரமான மசோதா - ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு முதல்வர் ஸ்டாலின் எதிர்ப்பு

சாத்தியமில்லாத கொடூரமான மசோதா - ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு முதல்வர் ஸ்டாலின் எதிர்ப்பு

கண்டனம்

எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களை ஆளுநர் மூலம் ஆளலாம் என்கிற தந்திரமும் இதில் உள்ளது. இந்தியாவின் பன்முகத் தன்மையைச் சிதைத்து, மாநிலங்களின் உரிமைகளைப் பறித்து, கடைசியில் மாநிலங்களையே ஒழிக்க தான் ‘ஒரே நாடு - ஒரே தேர்தல்’ திட்டம் வழிவகுக்கும்.

ஒரே நாடு ஒரே தேர்தல் ஒப்புதல்.. குரல்வளையை நெறிக்கும் செயல் - உதயநிதி ஸ்டாலின் கண்டனம்! | Deputy Cm Udhayanidhi Slams One India One Election

பேராபத்தான இத்திட்டத்தை நமது கழகத் தலைவர் - மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் தலைமையில் வலிமையுடன் எதிர்ப்போம்! மாநிலங்களைக் காப்போம்!!” என்று தெரிவித்துள்ளார்.