சாத்தியமில்லாத கொடூரமான மசோதா - ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு முதல்வர் ஸ்டாலின் எதிர்ப்பு

M K Stalin BJP India Election
By Karthikraja Dec 12, 2024 12:30 PM GMT
Report

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு முதல்வர் ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

ஒரே நாடு ஒரே தேர்தல்

நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் நவம்பர் 25ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 20ஆம் தேதிவரை நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தொடரில் 16 முக்கிய மசோதாக்களை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய பாஜக அரசு திட்டமிட்டுள்ளது.

ஒரே நாடு ஒரே தேர்தல்

இந்நிலையில், இன்று(12.12.2024) பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், ’ஒரே நாடு ஒரே தேர்தல்’ மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள நிலையில், நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு

விரைவில் இந்த மசோதாவைச் சட்டமாக்கி நடைமுறைப்படுத்த மத்திய அரசு தயாராகி வருகிறது. அதேநேரத்தில், ’ஒரே நாடு ஒரே தேர்தல்’ முறையை அமல்படுத்தக் கூடாது என எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

mk stalin

இந்நிலையில் தமிழக முதலமைச்சர் முகஸ்டாலின் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “கொடூரமான ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

நடைமுறைக்கு சாத்தியமில்லாத இந்த ஜனநாயக விரோத நடவடிக்கையானது மாநிலங்களின் குரல்களை அழித்து கூட்டாட்சித் தன்மையை சிதைத்து ஆட்சியை சீர்குலைக்கும். இந்திய ஜனநாயகத்தின் மீதான இந்த தாக்குதலை முழு பலத்துடன் எதிர்ப்போம்" என தெரிவித்துள்ளார்.