உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வரானால் வரவேற்போம் - காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை
துணை முதல்வர் பேச்சுக்கள் தமிழக அரசியலில் அதிகரித்துள்ளது.
துணை முதல்வர் பதவி
2022-ஆம் ஆண்டு திமுக அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்டு உதயநிதி ஸ்டாலினுக்கு இடம் அளிக்கப்பட்டவுடனேயே அடுத்து அவருக்கு துணை முதல்வர் தான் வழங்கப்படும் என திமுகவினரை தாண்டி எதிர்க்கட்சிகள் பேசி வருகிறார்கள்.
தற்போது வரை அப்பேச்சுக்கள் அடங்கவில்லை. கட்சிக்காக அனைத்து தேர்தல்களிலும் மும்முரம் காட்டும் உதயநிதியை வெகுவாக பாராட்டி பேசினார் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி.
அவரை தொடர்ந்து அமைச்சர் மனோ தங்கராஜும், பேசும் போது உதயநிதி துணை முதல்வராகும் தகுதி இருப்பதாக பேசினார்.
வரவேற்போம்
இன்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் மாநிலச் செயலாளர் டி.வி.முருகன், மாநில பொதுச் செயலாளர் எம்.பழனிவேல் உள்பட 16 பேர் தங்களை காங்கிரஸ் கட்சியில் இணைத்து கொண்டார்கள்.
இதையடுத்து செல்வப்பெருந்தகை செய்தியாளர்களிடம் பேசிய செல்வப்பெருந்தகையிடம் துணை முதல்வர் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்தவர், உதயநிதி துணை முதல்வராக பொறுப்பேற்றால் அதனை தமிழக காங்கிரஸ் வரவேற்கும் என்றார்.
மேலும், அவரை துணை முதல்வராக்குவது பற்றி ஆட்சி மற்றும் கட்சி தான் முடிவு செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டார் செல்வப்பெருந்தகை.