விஜய் இந்தியா கூட்டணிக்கு வருவதுதான் நல்லது - அழைப்பு விடுக்கும் காங்கிரஸ்
விஜய் இந்தியா கூட்டணிக்கு வர வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பேசியுள்ளார்.
செல்வப்பெருந்தகை
முன்னாள் மத்திய அமைச்சரும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவருமான வாழப்பாடி கே. ராமமூர்த்தியின் 86வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அவரது உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார்.
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவரிடம், பரந்தூர் விமான விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடி வரும் மக்களை தவெக தலைவர் விஜய் சந்திக்க செல்வது தொடர்பான கேள்விகள் எழுப்பப்பட்டது.
விஜய்
இதற்கு பதிலளித்த அவர், காவல்துறை அனுமதி அளித்துள்ளதால் அவர்கள் செல்கிறார். அங்கு உள்ள மக்கள் பாதிக்கக் கூடாது என்பதுதான் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடும். மக்களின் கோரிக்கையை தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும்.
விஜய் தனது மாநாட்டில் பேசியது போல் எதை வேண்டுமானாலும் எப்பொழுது வேண்டுமானாலும் ஒழித்து விடலாம். ஆனால் இந்துத்துவ மதவாத சக்திகளை அகற்ற விரும்பினால் அவர் இந்தியா கூட்டணிக்கு வருவதுதான் அவருக்கு, அவரின் கொள்கைக்கும், மக்களுக்கும் நல்லது என பேசினார்.
பரந்தூர் விமான விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 900 நாட்களுக்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களை ஜனவரி 20 ஆம் தேதி நேரில் சந்திக்க உள்ளார். இதற்கு அனுமதி வழங்கியுள்ள காவல்துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.