நான் பார்த்து நெகிழ்ந்து ரசித்த இளம் தலைவர் - செல்லூர் ராஜு பதிவு
அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ ராகுல் காந்தி குறித்து வீடியோ அரசியல் தளத்தில் சலசலப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக
நடந்து வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகிய அதிமுக, புதிய கூட்டணியை அமைத்து தேர்தல் சந்தித்துள்ளது.
அதே நேரத்தில், பாஜக மற்றொரு கூட்டணியையே அமைத்து சந்தித்துள்ளது. பாஜக வட்டாரத்தில் இருந்து விலகிய அதிமுக, மற்ற தேசிய கட்சியான காங்கிரஸ் கட்சியிடமே நெருக்கம் கட்டலாம் என எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் அவ்வாறு எதுவும் நடக்கவில்லை.
தற்போது தமிழகத்தில் தேர்தல் முடிந்து மொத்தமாக 5 கட்ட தேர்தல் முடிந்துள்ள நிலையில், அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு ராகுல் காந்தி குறித்து பதிவிட்டிருந்தது சலசலப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
செல்லூர் ராஜு பதிவு
அதாவது, அவரின் எக்ஸ் தளபதிவில், நான் பார்த்து நெகிழ்ந்து ரசித்த இளம் தலைவர் !!! புகழாரம் சூட்டியுள்ளார்.
இது தொடர்பாக பலரும் பலவிதமான கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். தேர்தலுக்கு முன்பாக காங்கிரஸ் கட்சிக்கு அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அழைப்பு விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நான் பார்த்து நெகிழ்ந்து ரசித்த இளம் தலைவர் !!! pic.twitter.com/3pGpxN9rDS
— Sellur K Raju (@SellurKRajuoffl) May 21, 2024